பிழை
by Gowthami Manoharan
தோளோடு தோள் உரசி...
விரலோடு விரல் கோர்த்து...
மெல்ல நடை போடையிலே
எங்கோ ஒலித்த
மணி சப்தம் கேட்டு
தூக்கம் கலைந்தேன்...
கனவு பிழையானதோ...
சாலையோரத்தில்...
மாலை நேரத்தில்...
எதிரெதிரே அமர்ந்து
தேநீர் பருகையிலே...
சட்டென விழுந்த
மழைத்துளியில்
கண் விழித்தபோது...
காட்சிப்பிழையானதோ...
உவமைக்கு எடுத்துக்காட்டாய்
உன் உருவத்தையே எழுத...
என் கரிக்கோலும்
வெட்கம் கொண்டு...
என்னை அறியாமல் கிறுக்க...
உவமையும் உருவமாய்...
உருவமும் உவமையாய்...
எழுத்துப்பிழையானதோ...
எதிர் எதிராக வந்தாலும்
சற்றும் ஏறெடுத்துப்
பார்க்காமல் நீ உன்
பார்வையாலே
உரசி செல்லும்போது...
என் வார்த்தைகளும்
தடுமாறி...
பேச்சுப்பிழையானதோ...
செங்காந்தள் நிறப்
பட்டுடுத்தி...
செங்கதிரே நீ
நடந்து வர...
சட்டென இதயத்துடிப்பு
சரசரவென்று ஏற...
உன் பிஞ்சு
பொன்விரல்கள் பற்ற
நினைக்கையிலே...
உனக்கானவன் உன்
விரல் கோர்க்க...
என் நிஜமும்
பிழையானதோ...
அனிச்சம் பூ தேகம் கொண்ட என்
அழகிய மலரே
ஆழியில் இருந்து எடுத்த என் அதிரமே
அண்டம் வியக்கும் என்
ஆகாச ரம்பையே
இதயம் பேசும் மொழி அறிவாயோ?
என் இதயம் பேசும் மொழி அறிவாயோ?
Published on the Writory Wall.