ஒப்பாரி
by Bharathi R, India. Second place in the Writory International Poetry Contest, June 2026, scored 91 out of 100.
தும்பி பறந்துச்சுன்னா தூவானம் துரக்குமடா துக்கம் தொண்டையிலே - அது தொடங்கியது எந்நேரம் ? கனவு வந்திருந்தா காத்தோட வந்திருப்பேன் சேதி வந்துருச்சே- நான் சேர்த்தணைக்க யாரிருக்கா ? வெயில் அடிக்கலையே வேப்பம்பூ உதுரலையே கையில் சோறு காயலயே கருணை மரம் சாஞ்9ருச்சே காட்டு வெள்ளம் வந்து அந்தக் கடல் நிரம்பிடுச்சா? கருணையுள்ள உசுரால அந்தக் காடு நிரம்பிடுச்சா ஊருக்குள்ள நானிறங்இ ஒத்தையில வரும்போது காலோடி கட்டிப்பிடிக்கும் கட்டித்தங்கம் எங்இருக்கு ? எட்டி விழுந்தோடி எழுந்து, பறந்து வந்தேன் எந்தன் நம்பிக்கையே எதற்காக நீ படுத்திருக்க? கட்டிப் பிடிக்கிறனே கால் தொட்டு வணங்குறனே சட்டுன்னு எழுந்து வந்து சாப்பிட்டியானு கேப்பீங்களா ? பாசம் இடைக்குமென்று பறந்தோடி வந்திருக்கேன் வேடம் போட்டு எதற்காக வீட்டு வாசல் காத்திருக்க ? ப்பா கூழிருக்கு மோரிருக்கு குடிக்கப் ப௫ியிருக்கு நீ கொடுக்க இல்லாம நிரம்பாதே என் வயிறு காடிருக்கு நிலமிருக்கு கருக்கு மரமிருக்கு பாடெடுத்த நீயில்லாம பழமெல்லாம் எனக்கெதுக்கு ? ஊருக்குள்ள வீடிருக்கு ஊரே இருக்க இடமிருக்கு அத்தனையும் சேர்த்து வச்ச என் சாமி ஏன் சாஞ்ூருக்கு ? மரமிருக்கு நிழலிருக்கு தென்னையில காயிருக்கு தஇண்ணையிலே நீயிருக்க வாசலில் ஏன் தேரிருக்கு பால் கறக்க பசு இருக்கு பக்கத்திலே கன்றிருக்கு கறக்க நீயில்லாம காராம்பசு கலங்இடுச்சே எப்ப நினைத்தாலும் - என் நெஞ்சம் உருகிடுமே-இனி என்ன நினைக்கறது - இரு கண்ணும் கரைஞ்௫ருமே வட்டமிட்டு சொந்தமெல்லாம் ஒப்பாரி பாட்டெடுக்க வாழ்க்கை ஒரு வட்டமுன்னு எவ்வாறு நானிருக்க ? ஆலமரம் இருக்குதுன்னு அது நிழலில் நான் இடந்தேன் புயலடிச்௪ சாஞ்சிருச்சே போக இடம் தெரியலயே க௧இர் அறுக்க நான் போனா கண்ணீர் தான் வருமே கண்ணீர் யென் கண்மறைச்சா கைவிரலில் தான் படுமே காயம் பட்டதுன்னா - எனக்கு கதறி நீயழுவ கைவிரலை கொண்டு நானும் காட்டுவது யாரிடமோ ? தாகமுன்னு சொன்னதுமே தண்ணீரோடு நீ வருவ சோகமுன்னு சொல்லுறனே கண் துடைக்க காணலியே பாரமுன்னு நினைக்காம பாசமெல்லாம் கொடுத்தீங்க முன்னாலதான் போகனுன்னு ஏன் முடிவு எடுத்தீங்க ? எமன் வந்து கேட்டிருந்தா என்னுசுர கொடுத்திருப்பேன் எதுக்காக உன்னுசுர கேட்டதுமே கொடுத்தீங்க ? பாசமும் அன்பும் சேர்த்து பல நூறு உறவு செய்து பாதுகாக்கச் சொல்லிவிட்டு பாதியிலே போனீங்க பிறக்கும்போது நீயழுது பிறரெல்லாம் சரித்திருப்பார் எல்லோரையும் அழவைத்து எதுக்காகப் படுத்திருக்க கள்ளம் கபடமின்றி -நெஞ்சம் களவாடிக் கொண்டீரே உள்ளம் படபடக்க உசுரு மட்டும் காணலயே கண்மூடித் தவமிருக்க காட்டுக்குச் சிலர் போவார் காட்டுக்குப் போகாமலே கடுந்தவம் எதுக்கையா ? பெருமழைக்கு வெள்ளம் வந்தா பேரழிவு தருமுன்னு கண்வழியும் நீரளவு கச்சிதமா யாரு வச்சா ? தாங்க முடியாம- மனம் தவிச்சு நிக்குறனே மனச மட்டும் பிரித்தெடுக்கும் மார்க்கமுண்டா ? சொல்லுங்களேன் ஊருக்குப் போகயிலே - இனி ஊர் காசு யார் தருவா ? தேருக்குள்ள போரவரே - என்ன தேத்திவிட யார் வருவா ? - இராம பாரத
Read all the winning poems with their scores, or enter the current round: every entry is read blind, scored out of 100 and receives a certificate.