தெருவின் ஓரம் திணறும் உயிர்
by Vijayashanthi V
சூரியனின் வெயிலும்
எனக்கில்லை
இரவின் மடியும்
எனக்கில்லை
தாயின் தாலாட்டும்
எனக்கில்லை
மனைவியின் பாராட்டும் எனக்கில்லை
பிள்ளையின் வாசமும்
எனக்கில்லை
பிச்சை எடுக்கவும்
மனமில்லை
பித்தன் பசியும்
ஓயவில்லை
துடிக்கும் நொடியில்
திகைக்கும் இதயம்
சிந்திக்கும்
இவன் நிலை
பாவமா? சாபமா?
Published on the Writory Wall.